உடுமலையில் களைகட்டியது வடு மாங்காய் சீசன் - விற்பனை அமோகம்!

திருப்பூர் உடுமலையில் வடுமாங்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் நாள் ஒன்று சுமார் ஒரு டன் அளவிலான மாங்காய் விற்பனைக்கு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வடு மாங்காய் சீசன் களை கட்டிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமங்களான தளிஞ்சி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, பூச்சி கொட்டான் பாறை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் ஏராளமான வடுமாங்காய் மரங்கள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கேற்ப வேறு எங்கும் இல்லாத அளவில் வடுமாங்காய் மரங்கள் இங்கு உள்ளன. சித்திரை மாதத்தில் சீசன் துவங்கும் நிலையில் தற்போது வடு மாங்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

நாளொன்றுக்கு ஒரு டன் வரையில் இங்குள்ள மலை வாழ் மக்களால் வடு மாங்காய்களை கீழே கொண்டு வந்து, உடுமலை நகரின் முக்கிய வீதியான தளி ரோட்டில் மலை போல் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

கிலோ 100 ரூபாய் வரை இந்த வடுமாங்காய் விலை போகிறது. இதைப் பறித்துக் கொண்டு வரும் மலைவாழ் மக்கள் நல்ல வியாபாரம் கிடைப்பதாகவும் லாபம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.



கோடை காலத்தில் கிடைக்கும் இந்த வடுமாங்காய் பார்ப்பதற்கு மிக அழகாகவும் மிகச்சிறியதாகவும் இருக்கும். நல்ல புளிப்பு சுவையுடன் இருப்பதால் இந்த வடுமாங்காய்களை ஊறுகாய் செய்து வைப்பதன் மூலம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தயிர் சாதத்திற்கும் மற்ற சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள ருசியான ஒரு வகை உணவாகும். தயிர் சாதத்திற்கும் மாவடுவிற்கும் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மாவடு ஊறுகாய் என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊறும் என கூறப்படுவதுண்டு.

அப்படிப்பட்ட வடுமாங்காய் தற்போது உடுமலை பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...