கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாம் - ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள கக்கடவு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்வில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த முகாமில் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 55 லட்சத்தில் 60 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் கக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...