மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு - கோவையில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களுக்கு விரோதமாக மத்திய அரசின் பட்ஜெட் இருப்பதாக கூறி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


கோவை: கோவை நரசிம்மநாய்க்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் V.தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் V.R.பழனிச்சாமி கண்டன உரையாற்றினார்.



இதைத் தொடர்ந்து, மாவட்டக்குழு உறுப்பினர் N.பாலமூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர் M.மோகன்ராஜ் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் N.ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...