கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை திருட முயன்ற கும்பல் - ஒருவர் கைது

கோவை மதுக்கரை அரிசிபாளையம் அருகே ராமலிங்கம் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, கோழிகளை திருட முயன்ற கார்த்திக் என்பவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சரவணன், ரமேஷ் என இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அரிசிபாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது55) அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு இவர் வழக்கம்போல பணிகளை முடித்து விட்டு தூங்கச் சென்றார்.

அப்போது, நள்ளிரவு மூன்று மணியளவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, தோட்டத்திற்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள் அங்கிருந்த ஆடு மற்றும் கோழிகளை திருட முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து ராமலிங்கம் சத்தம் போட்டதால் அங்கிருந்த சக விவசாயிகள், பொதுமக்கள் சுற்றி வலைத்து மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், ஒருவர் மட்டுமே சிக்கினார்.



இதையடுத்து அவரை மதுக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் நெகமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது28), என்பதும் அவருடன் குனியமுத்தூரை சேர்ந்த சரவணன் (வயது27) மற்றும் அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது22) ஆகியார் வந்ததும் தெரியவந்தது.

மேலும், குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்கள், ராமலிங்கம் வீட்டில் வைத்திருந்த ஆடுகளை திருட முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு, 3 பேர் மீதும் செல்வபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து, தப்பியோடி இருவரையும் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...