தொழில்துறையில் தமிழகம் 3 வது இடம் - ஒரே ஆண்டில் 11 இடங்கள் முன்னேறி புதிய சாதனை!

ஈசி வே ஆஃப் பிஸ்னஸில், இந்திய அளவில் கடந்த ஆண்டு 14 வது இடத்திலிருந்த தமிழ்நாடு, மத்திய அரசின் அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு ஒரே ஆண்டில் 11 இடங்கள் முன்னேறி 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் கோயமுத்தூர் தொழிலதிபர்களுடன் தமிழ்நாடு அரசு தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலூ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தொழில் துறையினர், தொழில் துறையில் உள்ள இடர்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், ஜுவல்லரி பூங்கா அமைக்க வேண்டும், நிலத்தின் விலை அதிகமாக உள்ளதால் தொழிற்பேட்டைக்கு, அரசாங்கம் பொதுவான இடத்தை ஒதுக்கி, புதிய தொழிற்சாலைகள் அமைக்க முன்வர வேண்டும் என்றும் அப்போது அவர்கள் கேட்டுக்கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு முதலீடு செய்வதற்கு ஏராளமானோர் ஆர்வமாக உள்ளார்கள். இதற்கு காரணம், தொழில் துவங்குவதற்கு விதிக்கப்பட்ட பல்வேறு விதிமுறைகளை தமிழ்நாடு அரசு எளிதாக்கியுள்ளது. ஈசி வே ஆஃப் பிஸ்னஸில், இந்திய அளவில் கடந்த ஆண்டு 14 வது இடத்திலிருந்த தமிழ்நாடு, ஒன்றிய அரசாங்கத்தின் அறிக்கையின் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு ஒரே ஆண்டில் 11 இடங்கள் முன்னேறி 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் தொடங்குவதற்கு லைசென்ஸ் வழங்க அதிக நடைமுறைகள் இருந்து வந்தன. தமிழ்நாட்டிலும் இது போன்றிருந்த நிலையை தற்போது மாற்றி, இவற்றை எளிதாக்கி தொழிற்சாலை விரைந்து துவங்குவதற்கு விதிமுறைகளை அரசு எளிதாக்கி உள்ளதால், தமிழ்நாடு தொழில்துறை மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேற நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை போன்ற வளர்ந்த மாவட்டங்களில் தொழில் பூங்கா கட்டமைப்பு வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளதால் அரசு பொதுவான இடத்தை தொழிற்சாலை அமைக்க, தொழில் பூங்காவாக உருவாக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பான நிலத்தை பெறுவதினால் யாருக்கும் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தொழில் பூங்கா உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். ஜுவல்லரி பூங்கா அமைத்தால் இரண்டு லட்சம் குடும்பங்கள் பயன்படும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து, விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவையில் பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விரைவில் உயிரியல் பூங்காவும் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...