கோவையில் 327 செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ் - மின் பகிர்மான கழகம் அதிரடி நடவடிக்கை!

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 327 செங்கல் சூளையின் அலுவலகங்கள், தொழிலாளர்கள் குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்பை 24 மணிநேரத்திற்குள் துண்டிப்பதற்கான நோட்டீஸை மின் பகிர்மான கழகம் வழங்கியுள்ளது.


திருப்பூர்: கோவை தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் மதுக்கரை, தொண்டாமுத்தூர், உள்ளிட்ட ஐந்து வருவாய் கிராமங்களில் யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்தும் அரசு அனுமதி அளித்ததை விட கூடுதலாக செம்மண் எடுத்து செங்கச் சூலைகள் இயங்கி வந்தன.

இதனை கண்டித்து தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு உள்ளிட்ட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளை மூடி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அங்கு எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக செங்கல் உற்பத்தியும், செங்கல் லோடுகளையும் எடுத்துச் சென்றனர்.



இதையடுத்து தடாகம் உள்ளிட்ட மதுக்கரை, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக இரவு நேரங்களில் செங்கல் சூளைகள் இயக்கப்படுவதாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், பாரத சக்கரவர்த்தி அமர்வு, அங்குள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மின் பகிர்மான கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து உத்தரவை அமல்படுத்தாமல் இருந்ததால், இரவு நேரங்களில் செங்கல் சூளைகளில் இருந்து செங்கல்கள் கடத்தப்பட்டு வந்தது.

இது தொடர்பாக தடாகம் காவல் நிலையத்தில் 30 வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக மீண்டும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை அலுவலகங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்பு கொடுத்த மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் மின் பகிர்மான கழக தலைவர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் எச்சரித்தனர்.



இதனைத் தொடர்ந்து, இன்று சுமார் 327 செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருந்து மின்வாரியம் மூலம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...