எதிர்கட்சியின் கோரிக்கையை சபாநாயகர் பரீசிலனை செய்யாதது சட்டவிரோதம் -புதிய தமிழகம் கட்சித்தலைவர் குற்றச்சாட்டு

நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட ஒருவர் முன் மொழிந்தவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்து முதல்வராக தேர்வு செய்து இருப்பது மக்கள் மன நிலையை ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது பொருள் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சட்டமன்றத்தில் ரகசியவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற எதிர்கட்சியினரின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் பரீசிலனை செய்யாதது சட்டவிரோதம் மட்டுமல்ல ஜனநாயக விரோதமமும் கூட என குற்றம்சாட்டினார். மேலும் கடந்த 12 தினங்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் வாக்கெடுப்பு நடந்திருப்பது சரியானதல்ல எனவும், அவர்களை தொகுதி மக்களை சந்தித்து கருத்தறிந்த பின் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், சட்டமன்றத்தில் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு கோரிக்கையை நிராகரித்து இருக்கன்றார் எனவும் கடந்த காலங்களிலும் சபாநாயகர் இதே போல செயல் பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரகசிய வாக்கெடுப்பை சபாநாயகர்  நிராகரிக்க என்ன காரணம் எனவும் கேள்வி எழுப்பினார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை காட்டி இருந்தாலும் தார்மீக ரீதியாக இது செல்லாது எனவும் இதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்த அவர் 122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் அமையும் இந்த ஆட்சி தொடர்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். தண்டிக்கபட்ட ஒருவரால் முன் மொழியப்பட்ட ஒருவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்து இருப்பது மக்கள் மன நிலையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது பொருள் எனவும் தெரிவித்தார். 

Newsletter

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...