திருப்பூர் அருகே சொத்துக்காக கொடுமைப்படுத்திய மகன் - காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தாய்!

திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவர், வீட்டை எழுதித் தருமாறு தன்னுடைய மகன் கார்த்தி அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மன்னரைப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி. கணவர் இவரை விட்டு பிரிந்து 20 வருடங்களுக்கு முன்பே சென்றுவிட்டதால், மகன் கார்த்தியுடன் தங்கி கூலி வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களாக மன்னரையில், ராஜேஸ்வரி தங்கி உள்ள வீட்டை அவரது மகன் கார்த்தி, தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கூறி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ராஜேஸ்வரி உடன்படாததால் அவரது மகனும், உறவினர்கள் சிலரும் சேர்ந்து அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, பாதுகாப்பு வழங்கக்கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார் .இது குறித்து வடக்கு காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தாயை உறவினர்களுடன் சேர்த்து மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...