கோவை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்!

கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துடியலூர் பகுதி திமுக செயலாளர் அருள்குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.


கோவை: துடியலூர் அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி இத்திட்டம் பல்வேறு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு 1ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராதாமணி, வட்ட கழக செயலாளர் ராஜசேகரன், பகுதி கழக பொருளாளர் ராக்கிமுத்து, வட்டக் கழக நிர்வாகிகள் வெங்கடேஷ், அன்பழகன், உதயகுமார், உதயகுமார், மணியன், ராஜ் கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியை பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...