தாராபுரம் அருகே பேக்கரியில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து - ரூ.15 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

தாராபுரம் அருகே உள்ள கொல்லப்பட்டி பிரிவில் சின்னப்பன் என்பவர் பேக்கரியில் பயன்படுத்தப்பட்டு வந்த சிலிண்டர் திடீரென வெடித்து தீ பற்றியதில் ரூ.15லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: தாராபுரம் அருகே பேக்கரியில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொல்லப்பட்டி பிரிவில் சின்னப்பன் என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் பயன்படுத்தப்பட்டு வந்த சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்தது.



இதைப் பார்த்த பேக்கரி ஊழியர்கள் தண்ணீர் பிய்ச்சி அடித்தும், மண்ணை வீசியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பேக்கிரி முழுவதும் பரவியதில், முற்றிலும் எரிந்து சேதமானது.



இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக பேக்கரியின் உரிமையாளர் சின்னப்பன் கண்ணீருடன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...