தாராபுரம் அருகே மதுபோதையில் தந்தையை கொன்ற வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

தாராபுரம் அருகேயுள்ள தளவாய் பட்டிணத்தைச் சேர்ந்த காளிதாஸ்(29) என்ற வாலிபர், தந்தை வேலைக்குப் போகச் சொன்னதால் ஆத்திரமடைந்து மதுபோதையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே மது போதையில் தந்தையை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை ரோடு தளவாய் பட்டிணம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி(55). விவசாய கூலித் தொழிலாளியான இவரது மகன் காளிதாஸ் (29). காளிதாசுக்குத் திருமணமான நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனால் தண்டபாணி, மகனை வேலைக்குச் செல்லுமாறு கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு அறுவடை பணியை முடித்துக் கொண்டு தண்டபாணி வீட்டிற்கு வந்தார்.

அப்போது மதுபோதையில் வீட்டில் படுத்திருந்த காளிதாசுக்கும், தண்டபாணிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மகனைக் கண்டிக்க இரும்பு கம்பியை எடுத்து மிரட்டிய போது, அந்த இரும்பு கம்பியைப் பிடுங்கிய காளிதாஸ், தந்தை என்றும் பாராமல் தண்டபாணியின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அலங்கியம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான காளிதாசை தேடி வருகின்றனர். தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...