ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை - காங்கிரஸ், திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் வெற்றிக் கொண்டாடட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

75% வாக்குப்பதிவு பதிவான நிலையில், சித்தோடு அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.



காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்கு எண்ணப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகிய வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தொடர்ந்து தபால் வாக்கு மற்றும் முதல் சுற்று இரண்டாம் சுற்று அடிப்படையில் முன்னிலை வகுத்து வருகிறார்.

இரண்டாம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் 23 ஆயிரத்து 321 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு 8124 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1498 வாக்குகளும், தேமுதிக 184 வாக்குகளும் பெற்றுள்ளனர்.



ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருவதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே சேலம் முதல் கோவை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிய தொடங்கியுள்ளனர்.



மேலும், பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது வெற்றி கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து துண்டுப்பிரசுரமும் அச்சிடப்பட்டு திமுகவினர் சார்பில் பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றிக் கொண்டாட்டங்களால் ஈரோடு கிழக்குத் தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...