கோவை வெள்ளியங்கிரி மலையில் நெல்லை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய திருநெல்வேலியை சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவர், இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர் முருகன் (வயது60). இவருக்குதிருமணம் ஆகி குழந்தைகள் இல்லாமல், மனைவியைப் பிரிந்து கடந்த 30 வருடங்களாக அண்ணன் மகள் மகாலட்சுமி என்பவரது பொறுப்பில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது ஊரை சேர்ந்த நண்பர்கள் 10 பேருடன் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்காக வந்துள்ளார். இரண்டாவது வருடமாக வெள்ளிங்கிரி மலை ஏறும் முருகன், இன்று அதிகாலை மலையேற தொடங்கினார்.முதல் மலையை, கடந்து இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கு அவருடன் இருந்தவர்கள் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வனத்துறையினர் உதவியுடன் இறந்த முருகனின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு முருகன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தசம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...