மனைவி, மாமியாரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயற்சி - அன்னூரில் கணவர், காதலி உட்பட 3 பேர் கைது!

மாமியார் மற்றும் மனைவி கீர்த்தனாவை விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற கணவர் ஸ்ரீதரன், அவருக்கு உடந்தையாக இருந்த காதலி ரம்யா, நண்பர் பழனி ஆகியோரை அன்னூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மதுரை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது27) கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை கேட்டரிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் பணிபுரியும் ரம்யா (வயது 27) அவரது நண்பர் பழனி (வயது 25) ஆகிய 3 பேரும் சேர்ந்து மனைவி கீர்த்தனாவையும், அவரது தாயார் கீதாலட்சுமியையும் விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்துள்ளார்.



இது குறித்து கீர்த்தனா அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், ஸ்ரீதரன் கைது செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்னூர் போலீசார் ரம்யா மற்றும் பழனியை தேடி வந்தனர். இந்நிலையில், சின்னியம்பாளையம் அருகே ஆர்ஜி புதூரில் ரம்யாவும், பழனியும் பிடிபட்டனர். இருவரையும் கைது செய்து அன்னூர் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரம்யா, பழனியை காதலித்து வந்ததாகவும், அதன் பிறகு ஸ்ரீதருடன் பழக்கம் ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார். இந்நிலையில் கீர்த்தனாவை கொலை செய்வதற்காக கீர்த்தனாவுக்கு விஷ ஊசியும், கீர்த்தனாவின் தாயார் கீதாலட்சுமிக்கு மயக்க ஊசியும் போட்டோம்.

கீர்த்தனாவிற்கு வலிப்பு ஏற்பட்டது. ஆனால் கீதாலட்சுமிக்கு மயக்கம் ஏற்படாமல், தன் மகளுக்கு வலிப்பு ஏற்பட்டது நேரில் பார்த்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க கூறினார். நாங்கள் வேறு வழியின்றி இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம் என்று கூறினர்.

இதையடுத்து, அன்னூர் போலீசார் ரம்யாவையும், பழனியையும் கொலை முயற்சி உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், செல்போன் மூலம் கீர்த்தனாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். மனைவியை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்ற கணவனுக்கு உடந்தையாக இருந்த காதலியும், நண்பனும் கைது செய்யப்பட்ட சம்பவம் அன்னூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...