கோவையில் லாவகமாக பைக் திருடும் கொள்ளையர்கள் - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை சிங்காநல்லூரில் மேன்சன் முன்பு பிரபாகரன் என்பவர் நிறுத்திவைத்திருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை, இரவில் இரண்டு இளைஞர்கள் லாவகமாகத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சியில் உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரபாகரன். தாய் தந்தையை இழந்த இவர், தனியாக வாழ்ந்து வருகின்றார். அழகு கலைஞராக வேலை செய்யும் இவர், மேன்சன் ஒன்றில் தங்கியிருக்கிறார்.பைக் மீது அலாதி பிரியம் கொண்ட பிரபாகரன், விலை உயர்ந்த உயர் ரக பைக் வாங்கும் கனவுடன் கடந்த ஐந்து வருடங்களாக சிறுக சிறுக பணம் சேமித்து வந்துள்ளார்.



இந்த நிலையில் ஒரே தவணையாக 2.17 லட்சம் ரூபாய் கொடுத்து, யமகா R15மாடல் பைக்கை வாங்கியுள்ளார்.



அந்த வாகனத்தைTN 37 DB 6977 என்ற எண்ணுடன் பதிவு செய்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய இந்த வாகனத்தை பணிக்கு செல்ல பயன்படுத்திய நிலையில், பணி முடிந்து இரவு பிரபாகரன் தங்கியிருக்கின்ற மேன்சன் முன் நிறுத்தியுள்ளார்.

வழக்கம்போல், காலை வந்து பார்த்தபோது தமது கனவு பைக் மாயமாகியிருந்தது கண்டு பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்துசிங்காநல்லூர் போலீசில் அவர்புகார் தந்தார். அதன்அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.



பைக்கை நள்ளிரவில் நோட்டமிட்டு வந்த பைக் கொள்ளையர்கள், யாரும் வருகின்றார்களா? என சுற்றிலும் பார்த்து லாவகமாக திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



மேலும், அந்தப் பைக்கின் லாக்கை இருவர் உடைத்து சாவி இல்லாமல் வண்டியை நகர்த்துவதும், வண்டி ஒயரை கட் செய்து ஸ்டார்டு செய்து வாகனத்தை ஓட்டி செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...