தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கோயில் தேரோட்டம் - வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்!

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உள்ள வஞ்சியம்மன் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு, தேரின் வடம்பிடித்து இழுத்தனர். உப்பு, மிளகு மற்றும் நவதானியங்களை அம்மன் மீது தூவி பயபக்தியுடன் வழிபட்டனர்.


திருப்பூர்: இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மூலனூர் வஞ்சியம்மன் கோவில் கொங்கு, சேரலான்,பூசன் குலத்தவருக்கு சொந்தமானது. இந்த கோவிலில் 41- ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் இலட்சார்ச்சனை பெருவிழா நேற்று கலச பூஜை, வேள்வி அபிஷேகம், தீபாராதனைகளுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் தேர் முன் கோவிலை சேர்ந்த கொங்கு, சேரலான், பூசன் குலத்தவர்கள் மற்றும் உத்திர நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் சார்பில் தேங்காய் உடைக்கப்பட்டது.



பின்னர், ராமநாதன், ராமசாமி உள்ளிட்ட கோயிலைச் சேர்ந்த குலத்தவர்கள் மற்றும் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் மூலனூர் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி துரை தமிழரசு ஒன்றிய குழு பெருந்தலைவர் சுமதி கார்த்தி பேரூர் கழக செயலாளர் தண்டபாணி, அதிமுக பேரூர் கழக செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் வடம் பிடித்து தேர்த்திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு,மிளகு மற்றும் நவதானியங்களை அம்மன் மீது தூவி பயபக்தியுடன் வழிபட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தேர் திருவிழா ஏற்பாடுகளை மூலனூர் வஞ்சியம்மன் கோவில் கொங்கு, சேரலான், பூசன் நற்பணி மன்றம் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...