கோவை அருகே காட்டுயானை தாக்கி இளைஞர் பலி - சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது சோகம்!

கோவை மாங்கரை பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர், தனியார் மருந்து நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். இவர் வீட்டின் அருகில் இரவில் சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை மற்றும் கூட்டமாக வரும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும் மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு மாங்கரை பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, அங்கு குடியிருக்கும் மகேஷ்குமார் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தபோது தாக்கியுள்ளது. மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்த போது வீட்டருகே காட்டு யானை மகேஷ்குமாரை தாக்கிவிட்டு அங்கேயே நின்றிருந்தது.



சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்றவுடன் மகேஷ்குமாரின் அருகில் சென்று பார்த்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றிவந்தார்.

இது குறித்து, தடாகம் காவல் துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மகேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...