ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவையில் காங்கிரசார் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிப் பெற்றதை அடுத்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை அடுத்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் காங்கிரஸ் மனித உரிமை துறையினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.காலை முதலே தி.மு.க.கூட்டணிக் கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளரான தென்னரசுவை விட மூன்று மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னணி பெற்றார். இறுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.



இதை அடுத்து கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையினர் கோவை கரும்புக்கடை பகுதியிலிருந்து ஆத்துப்பாலம் வரை வெற்றி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.



தொடர்ந்து அந்த பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநிலச் செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா, மாவட்ட தலைவர் சாரமேடு சம்சு, மற்றும் நிர்வாகிகள் ஜான்சன் அக்கீம், சிக்கந்தர், கனி, நசீம் பைசல், அபு, நஜ்முதீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...