சிங்காநல்லூரில் மதுபோதையில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த தச்சு வேலை செய்து வந்த ராம்கி என்பவர் மதுபோதையில் வீட்டின் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே வீட்டின் மாடியில் மதுபோதையில் செல்போன் பேசிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்கி(35) தச்சு தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடிப்பழக்கம் கொண்ட ராம்கி நேற்றைய தினம், அவரது வீட்டின் மாடியில்மதுபோதையில் நடந்தபடி, செல்போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது மனைவி சிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் மாடியிருந்து கீழே விழுந்து ராம்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...