திருடுவதையே லட்சியமாக வைத்துள்ள லட்சுமணன் கைது - 61வது முறையாக போலீசாரிடம் சிக்கினார்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போலீசாரின் ரோந்து பணியின் போது, கோவையின் பல்வேறு இடங்களில் பல்வேறு சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் லட்சுமணனை போலீசார் 61வது முறையாக கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கால் நூற்றாண்டாக சின்ன சின்ன திருட்டில் ஈடுபட்டு வரும் லட்சுமணனை போலீசார் 61வது முறையாக கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் ஜோதிமணி மற்றும் காவலர் கோட்டைசாமி ஆகியோர் இன்று அதிகாலை மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், அவரை பைக்கில் துரத்திச் சென்று பிடித்தனர்.

இதனையடுத்து விசாரணையில் பிடிபட்ட நபர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த லட்சுமணன் (44) என்பதும், இவர் நேற்று முன்தினம் நெகமம் காவல்நிலையத்தில் உள்ள திருட்டு வழக்கில் ஆஜராக பொள்ளாச்சி நீதிமன்றத்திற்கு வந்த போது, அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றதும் தெரிய வந்தது.

இந்நிலையில் பிடிபட்ட லட்சுமணன் புளியம்பட்டியில் உள்ள டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1,270 பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்ட ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரின் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து முகமூடி, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே கைதான லட்சுமணன் தனது 19வது வயதில் திருட ஆரம்பித்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக சின்ன சின்ன திருட்டில் ஈடுபட்டு வருகிறார்.

சின்ன சின்ன திருட்டுக்கள் குறித்து பெரும்பாலும் யாரும் புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சிறிய அளவிலான திருட்டில் மட்டுமே ஈடுபடுவார். பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை திருடியுள்ளார். இவரது திருட்டு வழக்கில் இதுதான் அதிக மதிப்பு கொண்ட திருட்டாகும்.

இந்நிலையில், கால் நூற்றாண்டாக வேலை வெட்டிக்கு செல்லாமல் திருட்டில் ஈடுபட்டு வரும் லட்சுமணன், 61வது திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...