உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்த பணியாளர் முறையை கைவிடுவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ‌‌ஏஐடியூசி உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் நகராட்சி பகுதியில் ஒப்பந்தம், வெளிச்சந்தை, தினக்கூலி, சுய உதவி குழு போன்ற முறைகளை கைவிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.



மேலும், பழைய ஓய்வூதியம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், தற்பொழுது பணி புரிந்து வரும் நிரந்தர தொழிலாளர்களை வேறு இடத்திற்கு வேறு வேலைக்கு மாற்றக்கூடாது, தற்பொழுது பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களின் சர்வீஸ் பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ‌சரவணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் நாகராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணசாமி. செளந்தரராஜன். சுப்பிரமணியம் உள்ளிட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...