பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்..! - உடுமலை நகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

உடுமலை அருகேயுள்ள ராமசாமி நகரில் தனிநபர் இட ஆக்கிரமிப்பு குறித்து அளவிட வந்த நகராட்சி அதிகாரிகளிடம், கடைகள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ராமசாமி நகர் பகுதியில் அப்பகுதி மக்கள் சார்பில், புதிதாக விநாயகர் கோவில் ஒன்றை கட்டி வந்தனர். இந்நிலையில் அதன் அருகில் உள்ள தனி நபருக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து கோவில் கட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ராமசாமி நகர் பகுதிக்கு சென்று விநாயகர் கோவில் கட்டியுள்ள இடத்தை சர்வேயர் வைத்து முறைப்படி அளவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.



இந்நிலையில், போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் வலியுறுத்தினர்.

மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் சீட்டுகள் உள்ளிட்டவைகளையும் முறைப்படி அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...