கோவையில் ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி - தம்பதி உட்பட நான்கு பேர் கைது

ஆனைமலை சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கி அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நிறுவனத்தின் உரிமையாளரான சதாசிவம், அன்னபூரணி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பொள்ளாச்சி- கோட்டூர் சாலை அருகே உள்ள அண்ணாமலையார் அவன்யூ பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் ஆனைமலை சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அண்ட் கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சதாசிவம் சிட்பண்ட்ஸ் ஆகிய ஆறு நிதி நிறுவனங்களையும் சதாசிவம் மற்றும் அவரது மனைவி அன்னபூரணி, மணிகண்டன், பாஸ்கர் ஆகிய நான்கு பேர் நடத்தி வந்தனர்.

இவர்களது நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 18 சதவீதம் வட்டி தருவதாகக் கூறியும், பல்வேறு விதமான ஏலச்சீட்டுகள் நடத்தி பொதுமக்களிடமிருந்து டெபாசிட் பணத்தைப் பெற்றுள்ளனர்.



ஆனால் அவர்கள் தெரிவித்த குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், நான்கு பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...