ரூ.1200 கோடி செலவழித்தும் ஏன் ரயில்கள் இயக்கவில்லை..? - பொள்ளாச்சி எம்.பி கேள்வி

தெற்கு ரயில்வே சார்பில் பாலக்காட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இன்னும் ரயில்கள் இயக்கவில்லை எனக் பொள்ளாச்சி எம்.பி.,சண்முக சுந்தரம் கேள்வி எழுப்பினார்.


கோவை: பாலக்காட்டில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துகடவு முதல் பொள்ளாச்சிக்குட்பட்ட 24 கி.மீட்டர் தூரம் வரையிலான ரயில்வே பகுதிகள் பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த கோட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் நீனு இட்டியேரா, டிஆர்எம் உட்படப் பல ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இதுவரை ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...