ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவை துடியலூரில் திமுகவினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, துடியலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி வேட்பாளரை, விட திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.



இதைக் கொண்டாடும் விதமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில் 2ஆவது வட்டக் கழக செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் தமிழ் நிதி, முன்னாள் மாவட்டஅவைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் நிதியரசு, கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, வெற்றிச்செல்வன், மனோன்மணி ராஜகோபால், சி டி சி சுப்பிரமணியன், வாசு, பழனிச்சாமி, சின்ன சாமி, அயூப் கான், இம்ரான் கான், சுபாஷ், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த, நாகராஜ் சிங்காரவேலன் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...