ஈரோடு தேர்தலில் வெற்றி - தாராபுரத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தாராபுரத்தில் காங்கிரஸ், திமுக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


திருப்பூர்: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, தாராபுரத்தில் காங்கிரஸ், திமுக கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் 11-வது சுற்றில் 86,102 வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே எஸ் இளங்கோவன் வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.



இந்த வெற்றி கொண்டாட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் மாலதி, காங்கிரஸ் பி.சி.சி. பொதுக்குழு உறுப்பினர் சரோஜினி, காங்கிரஸ் தாராபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன். திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...