ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவை துடியலூரில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றியை கோவையில் கூட்டணி கட்சியினர் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனை கொண்டாடும் விதமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை அடுத்த சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சமுத்து தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.



முன்னதாக கோவை மாநகராட்சி 15வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கவுன்சிலர் சாந்தாமணி பச்சைமுத்துவிற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்ன ராமகிருஷ்ணன், மணி, 14வது வார்டு தலைவர் ரங்கசாமி, 15 ஆவது வார்டு செயலாளர் ரகுபதி சுபாஷ், கவுண்டம்பாளையம் திமுக பிரமுகர் ஜவகர், கே.ஜி.புதூர் கண்ணன், பழனிச்சாமி என்கிற மணி, கவுண்டம்பாளையம் ரவி, காங்கிரஸ் கட்சி சேர்ந்த ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...