கோவையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை - பெரிய நகைகளை விட்டு சிறிய நகைகளை மட்டுமே திருட்டு!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சண்முகசுந்தரம் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் வசித்துவருபவர்சண்முகசுந்தரம் (வயது64). ஓய்வு பெற்ற TNEB ஊழியரான இவர், தனது மனைவியின் நகைகளை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். வீடு திரும்பிவந்து பார்த்தபொழுது, பீரோவில் இருந்த நகைகளில் ஒரு சில நகைகள் காணாமல் போயிருந்தன.

ஆரம் போன்ற பெரிய நகைகள் பத்திரமாக இருந்த நிலையில், 7 சவரன் தங்க சங்கிலி, 4 சவரன் வளையல், 1 சவரன் மோதிரம், முக்கால் சவரன் தோடு என சுமார் 13சவரன் நகைகள் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில்வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரின் வீட்டிற்கு நேரில் சென்று, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் உள்ள நகைகளில் பெரிய நகைகளை விட்டுவிட்டு சிறிய நகைகளை மட்டுமே கொள்ளையடித்தவர்கள் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்படி வித்தியாசமாக திருடியிருப்பது ஏன் என்ற குழப்பத்துடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...