கொடநாடு கொலை வழக்கு - செல்போன் எண்களை தீவிரமாக ஆராயும் சிபிசிஐடி!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, அந்த மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு பதிவான செல்போன் எண்கள், பிற மாவட்டங்களுக்கு சென்ற அழைப்புகளை கண்டறியும் பணிகளை சிபிசிஐடி போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் கடந்த 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான போலீசார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதலாவதாக சம்பவம் நடந்த காலத்தில் நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்த முரளிரம்பா-க்கு சமன் வழங்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு சாட்சியங்களை சிபிசிஐடி போலீசார் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்பவம் நடந்த 2017ல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்கள் குறித்து இதுவரை நடந்த விசாரணையின்போது பதிவுகள் ஏதும் பெறப்படாத நிலையில், பிஎஸ்என்எல் செல்போன் தலைமை அலுவலகமான திருச்சி அலுவலகத்தில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு நீலகிரியில் பதிவான செல்போன் பதிவுகளை சேகரிக்கும் பணியை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தினர்.

முதல் கட்டமாக டேப் வடிவில் உள்ள அந்த பதிவுகளை டிஜிட்டலாக மாற்றி தகவல்களைப் பெறும் வகையில் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு பிறகு, சம்பவம் நடந்தபோது எந்தெந்த செல்போன் எண்கள் யார் யாருடன் இணைப்பில் இருந்தது மற்றும் சந்தேகப்படும் நபர்கள், வழக்கில் தொடர்புடைய நபர்களின் எண்கள் என முழுமையாக எடுத்து விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...