ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் ரூ.19 லட்சம் மோசடி - கோவை சைபர் கிரைமில் பெண் புகார்!

கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் அமேசான் தளத்தில் 19 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்ததாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். வீட்டிலிருந்து வேலை, டேட்டா என்ட்ரி, ஆன்லைன் முதலீடு என்று விதவிதமாக சைபர் கிரைம்களுக்கு பொதுமக்கள் இரையாக கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது40). இவர் இணையதளத்தில் முதலீடு செய்வதற்காக வர்த்தக ரீதியான முன்னணி இ-காமர்ஸ் இணையத்தில் தேடியுள்ளார். அப்பொழுது ஒரு வாட்ஸ்-அப் நம்பரை பார்த்த கலைச்செல்வி, அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர்கள் அமேசான் தளத்தில் முதலீடு செய்தால் அதிகளவிலான லாபம் கிடைக்கும் என்று வழிகாட்டியுள்ளனர்.

அவர்கள் www.amazon5551.com என்ற URL வெப்சைட்டை வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் மூலமாக அனுப்பி இருக்கின்றனர். இதை நம்பிய கலைச்செல்வி தனது 3 வங்கி கணக்கிலிருந்து 19 லட்சத்து 2 ஆயிரத்து 993 பணத்தை முதலீடாக செய்துள்ளார். ஆனால், முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் தவித்துள்ளார்.

இதுகுறித்து தனக்கு இணையத்தில் வழிகாட்டியவரிடம் அழைத்து கேட்டபொழுது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி, சிட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகின்றனர்.

கலைச்செல்வியின் வங்கி பரிவர்த்தனை விவரங்களை கைப்பற்றியுள்ள சைபர் கிரிமினல்களின் வங்கி கணக்குகளை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். வீட்டிலிருந்து வேலை, டேட்டா என்ட்ரி, ஆன்லைன் முதலீடு என்று விதவிதமாக சைபர் கிரைம்களுக்கு பொதுமக்கள் இரையாக கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...