கோவையில் பெண் காவல் ஆய்வாளருக்கு பரிவட்ட மரியாதை - கோனியம்மன் கோயில் நிர்வாகம் கவுரவிப்பு!

கோவையில் சமீபத்தில் முடிந்த கோனியம்மன் கோயில் திருவிழாவில் திருட்டு சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக கண்காணிப்பு பணி மேற்கொண்ட பெண் காவல் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் மாசி தேரோட்டம் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர் திருவிழாவிற்கு பெரிய கடை வீதி போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் பெரிய கடை வீதி காவல் ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டுவது வழக்கம். அதன்படி கோவில் நிர்வாகத்தார் பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த பெண் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, தேரை வடம் பிடித்து இழுக்க அழைப்பு விடுத்தார். பெண் போலீஸ் ஆய்வாளர்களுக்கு பரிவட்டம் கட்டுவது இதுவே முதல் முறையாகும்.



இதற்கு முன்பு, தேரோட்டத்திற்கு அங்கு பணியாற்றிய ஆண் ஆய்வாளர்கள் பரிவட்டம் கட்டப்பட்டு தேரை வடம் பிடிப்பர். இந்த முறை பெண் ஆய்வாளர் வடம் பிடித்து இழுத்துள்ளார். அவருடன் மாநகர துணை ஆணையர் சந்தீஷ் உள்ளிட்ட போலீசாரும் பரிவட்டம் கட்டியவாறு தேரோட்டத்தை நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவின்போது சின்ன சின்ன திருட்டு சம்பவங்கள் நடைபெறும். அதனை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சாதாரண உடைகளில் மக்களுடன் மக்களாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் இந்த முறை ஒரு திருட்டு சம்பவம் கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...