கோவையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டு - அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

கோவையில் ஒரே நாளில் ஆர்.எஸ்.புரம், பீளமேடு, காட்டூர் பகுதிகளில் நிறுத்திவிட்டு சென்ற 4 இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம், வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன திருட்டை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஆர் எஸ் புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள டிரேடிங் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு இரவுதான் தங்கியிருக்கும் அடுக்குமாடி பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியுள்ளார்.பின்னர் காலையில் வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் முகேஷ் பட்டேல் தந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபொழுது பைக் கொள்ளையன் ஒருவன், பைக்கை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



இதேபோன்று பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கே.எம். சி.ஹெச் மருத்துவமனை எதிரே, தனியார் நிறுவன ஊழியர் கதிரவன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கதிரவன் தந்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் துணிக்கடை ஒன்றின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அஜித்குமார் என்பவரது வாகனத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அஜித்குமார் தந்த புகாரின் அடிப்படையில் காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், பீளமேடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே தினக்கூலி தொழிலாளி தினேஷ் என்பவரின் பைக்கும் திருடப்பட்டுள்ளது. இது குறித்து தினேஷ் வந்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

கோவையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நான்கு பைக்குகள் திருடுப்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புடன் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் திருடப்பட்டுள்ளதால், பைக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...