தாராபுரம் அருகே மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.22 கோடிக்கு பருத்தி ஏலம்

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலகத்தில் பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8270-ம், குறைந்தபட்சவிலை ரூ.6800-ம் விலை நிர்ணயிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 586 விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் வந்திருந்து மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8270-ம் குறைந்தபட்சவிலை ரூபாய்.6800-ம் சராசரி விலை ரூ 7400-ம் வணிகர்கள் நிர்யணித்தனர். விற்பனைக்கு வந்திருந்த 5255 மூட்டை பருத்தி (1671.66 குவிண்டால்) ரூ.1,22,96,760/-கோடிக்கு 16 வியாபாரிகள் ஏலம் மூலம் கொள்முதல் செய்தனர்.

இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...