106 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை - கோவை தனியார் மருத்துவமனை சாதனை!

துடியலூரில் உள்ள பாகிரதி மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரனீஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 106 வயது முதியவர் சுப்பிரமணியம் என்பவருக்கு 2.30 மணிநேரம் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.



கோவை: கோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் 106 வயதான முதியவர் சுப்பிரமணியம். இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட இவர், 106 வயதிலும் அவரது வேலைகளை அவரே செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவரின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடக்க முடியாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து, அவரது குடும்பத்தார் கோவை துடியலூரில் உள்ள பாகிரதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 106 வயதிலும் சுப்பிரமணியத்தின் உடல் அறுவை சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் அவரது எலும்புகள் வலுவாக இருந்ததையும் கண்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர்.



எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரனீஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 2 ½ மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திலேயே முதியவர் சுப்பிரமணியம் நடக்கத் தொடங்கியுள்ளார்.



இது குறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் பிரனீஷ் கூறும்போது, சாதரணமாக 70 வயதைக் கடந்தாலே எலும்புகள் வலுவில்லாமல் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் 106 வயதிலும் சுப்பிரமணியம் அவர்களின் எலும்புகள் மிகவும் உறுதியாக உள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து நல்ல நிலையில் நடக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு அவர்களது குடும்பத்தார் மிகவும் ஒத்துழைத்தனர். இவ்வளவு முதிய வயதில் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது இதுவே முதல் முறை. அவரது உடல் ஒத்துழைத்ததிற்கு காரணம் அவரது உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியுமே. அனைவரும் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அதிக கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...