பல்லடம் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரத்தில் செல்வம் என்பவரின் பஞ்சு ஆலையின் இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக எற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.


திருப்பூர்: திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் பஞ்சு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்கபுரத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் செல்வம் டெக்ஸ் என்ற பஞ்சாலையை நடத்தி வருகிறார். இன்று மாலை 6 மணியளவில் ஆலையிலிருந்த இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றத் தொடங்கியது.



சிறிது நேரத்தில் தீ மளமளவென இயந்திரத்தின் அருகே இருந்த பஞ்சுகளுக்கு பரவியதால், ஆலையின் ஒரு பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. இதைப்பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...