ஈரோடு இடைத்தேர்தலில் வென்றது தற்காலிகமான வெற்றிதான்..! - கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது இது செயற்கையான வெற்றி. ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்காக, இதர தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக எவ்வித வளர்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெறவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டியுள்ளார்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த முடிவுகளாகதான் தாமக கருதுகிறது. அதற்கு எடுத்துக்காட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசங்கள், ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பணநாயகம் வென்றுவிட்டதாகவே வாக்காளர்கள் கருதுகிறார்கள். மக்களிடம் பொதுவாகவே மனமாற்றம் தேவைப்படுகிறது.

அழுத்தத்திற்காக மக்கள் கட்டுப்படக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு, கண்காணிப்பு நடவடிக்கைகள் எல்லாம் நியாயமான தேர்தலுக்கு அவசியம். இது வருங்கால தேர்தலுக்கு தேவைப்படுகிறது. ஆளுங்கட்சியை பொறுத்தவரை அவர்களுடைய ஆட்பலம் பணபலத்தை வைத்து ஏழை எளிய நடுத்தர மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து பட்டியில் பூட்டி வைத்து வாக்குகளை பெறுவது என்பது இந்திய வரலாற்றிலேயே எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறாத ஒன்று.

மேலும் ஒரு தொகுதி இடைத் தேர்தலுக்காக மீதமுள்ள 233 தொகுதிகளில் ஒரு மாத காலமாக வளர்ச்சி திட்டங்கள் நடைபெறவில்லை என்பதை அந்தந்த தொகுதி மக்களே நன்கு அறிவார்கள். ஆளும் கட்சிக் கூட்டணி வெற்றி என்பது ஒரு தற்காலிகமான வெற்றி. இது செயற்கையான வெற்றி.

இனி வரும் காலங்களில் ஜனநாயகத்திற்கான தேர்தலாக தேர்தல்கள் அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்காணிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தமிழகத்தின் ஆட்சியாளர்களுடைய ஆட்பலம், பணபலம், அதிகாரபலம் ஆகியவற்றைத் தாண்டி முறையாக செயல்பட்டு இருக்க வேண்டும். உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும், என்றார்.

அதிமுகவிடம் ஒற்றுமை இல்லை என அண்ணாமலை தெரிவித்ததாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், அதுபோன்று அண்ணாமலை கூறவில்லை தவறானவற்றை சித்தரிக்க வேண்டாம், என்றார்.

இந்த தேர்தலில் இவ்வளவு முறைகேடுகளைத் தாண்டி அதிமுக இவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறது என்றால் உண்மையிலேயே மக்கள் மனதில் அதிமுக இடம் பெற்றுள்ளது. மக்களிடம் இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் கூட 25 சதவீதத்திற்குமேல் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவை மதித்து மக்கள் வாக்களித்துள்ளனர் எனில் அதிமுக கூட்டணிக்கு இனிவரும் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டால் வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

தேர்தல் ஆணையம் இதுபோன்ற தேர்தல்களை நடத்தக் கூடாது. இந்த தேர்தலில் நடைபெற்றதை எல்லாம் பார்த்துவிட்டு இனிவரும் தேர்தலிலாவது இது போன்ற தவறுகள் அடுத்தமுறை நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்வது என்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.

அகில இந்திய அளவில் வடகிழக்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது, காங்கிரஸ் கட்சியோ அதனை சார்ந்த கூட்டணிகளோ மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறி படுதோல்வியை அடைந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிகள் வரும் நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறக்கூடிய நல்ல வாய்ப்பு இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் முழு நம்பிக்கையை பெற்று தேர்தல் முறையாக நடக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி முழுமையாக வெற்றி பெறக்கூடிய நிலையை நாங்கள்(தமாக) ஏற்படுத்துவோம்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...