கோவை குழந்தைகள் காப்பத்தில் போக்சோ விழிப்புணர்வு - நீதிபதி பங்கேற்பு

கோவை காந்திமாநகரில் உள்ள அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்று நீதிபதி கே.எஸ்.எஸ்.சிவா ஆய்வு மேற்கொண்டு, போக்சோ சட்டம் குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: காப்பகங்களில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பது நம்முடைய தலையாய கடமை. குழந்தைகள் நலன் சார்ந்த அரசாங்க துறைகள், தன்னார்வலர்கள் இப்பணியை செய்துவருகின்றனர். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் காப்பகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை ஆவணம் செய்வது அவசியம்.



அதனடிப்படையில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரான, சார்பு நீதிபதியான கே எஸ் எஸ் சிவா, கோவை மாவட்டம் காந்தி மாநகரில் அமைந்துள்ள அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று குழந்தைகளுடன் உரையாடினார். போக்சோ சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.



அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகள் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பக தலைமை அலுவலர்கள் குழந்தைகள், நலக்குழுவினை சார்ந்தவர்கள், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பெண் குழந்தைகளை பாதுகாப்பது அவசியம் என்ற அடிப்படையிலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...