தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோக்கள் - காவல்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள், இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுகிறார்கள், இந்தி பேசும் மக்கள் மீது இத்தனை அடக்குமுறை இந்தியாவில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்ற ஆடியோவுடன் வட இந்தியாவில் வீடியோக்கள் வேகமாகப் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, வட இந்தியாவில் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வேகமாகப் பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆளும் தமிழ்நாட்டில் வட மாநில மற்றும் இந்தி பேசும் மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடைபெறுவதாக முகமத் தன்வீர் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.



இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முதல் வீடியோவில் கோவையில் ஒட ஒட விரட்டி ரவுடி ஒருவர் வெட்டியும் துப்பாக்கியால் கொலை செய்யப்படுகிறார். இதில் வடமாநிலத்தவருக்குத் தொடர்பில்லை. இந்த வீடியோ சமீபத்தில் தமிழகம் முழுவதும் வைரலானது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.



இரண்டாவது வீடியோவில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த கோகுல் என்பவரை முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

மூன்றாவது வீடியோ வடமாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த பிப்.19ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனத்தில் இந்த செய்தி வீடியோவுடன் பதிவாகியுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவைக் குறிப்பிட்டு முகமது தன்வீரை எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை, இதுபோன்ற வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...