கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - 2 பேருக்கு வழங்கிய கோவை ஆட்சியர்!

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணியின்போது காலமான இருவரது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த நவமணி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மகன் நரேந்திர குமாருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையினை வழங்கினார்.



இதேபோன்று, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரவிக்குமார் உயிரிழந்த நிலையில் அவரது மகள் தனுஸ்ரீக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அலர்மேல் மங்கை மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...