கோவை சூலூரில் சிறுமி பாலியல் வழக்கு - இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சூலூரை சேர்ந்த சரவணனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15ஆயிரம் அபராதம் விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: சிறுமியை பாலியல் பலாத்காரம் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி எல்லைக்குட்பட்ட சூலூரைச் சேர்ந்தவர் சரவணன். கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று சரவணனுக்கு15 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.15,000 அபராதமாக விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பெண் காவலர் ஆனந்தியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...