பல்லடம் அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

பல்லடம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அருள்புரத்தைச் சேர்ந்த தர்ஷனா என்ற குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.


திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த பல்லடம் அரசு மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சை பெரும் அளவிற்குப் படுக்கை வசதிகளுடன் கூடிய பெண்கள் வார்டில் உள்ள ஒரு பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.



இன்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென பெண்கள் வார்டு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிகிச்சைப் பெற்று வந்த அருள்புரத்தைச் சேர்ந்த தர்ஷனா என்ற குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதைப் பார்த்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.



இந்நிலையில் அங்குச் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில நோயாளிகள் மருத்துவமனையில் உள்நோயாளி உதவியாளர்கள் தங்கும் கட்டிடத்தின் வெளியே அமர்ந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் நோயாளிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...