திருப்பூரில் பீகார் இளைஞர் கொலையா.. தற்கொலையா..? - காவல் துணை ஆணையர் விளக்கம்

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது பீகாரை சேர்ந்த சஞ்சீவ்குமார் உயிரிழந்ததாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் இது விபத்துதான் என்பதை உறுதிப்படுத்தப்பட்டதாக காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா விளக்கம் அளித்துள்ளார்.



கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூர் போயம் பாளையம் பகுதியில் பின்னலாடை சார்ந்த உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் சிறிய கடையை நடத்தி வந்துள்ளார்.

நேற்று இரவு 1மணி அளவில் திருப்பூர் வழியாக கேரளாவிலிருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.



சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதற்குள் சஞ்சீவ் குமாரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக பரவிய வதந்தியின் காரணமாக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக குவிந்தனர்.

மேலும் சஞ்சீவ் குமாரின் செல்போன் மற்றும் வாகனங்கள் காணவில்லை எனவும், அவரை கொலை செய்து உடைமைகளை திருடிச் சென்றதாக வடமாநில தொழிலாளர்கள் குற்றச்சாட்டினர். அவர்களிடம் காவல்துறை சார்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இருப்பினும் கலைந்து செல்லாமல் ரயில் நிலையத்தில் சஞ்சீவ் குமார் வந்து சென்றதற்கான ஆதாரங்களை காட்டும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

காவல் துறை சார்பில், நள்ளிரவு 12.56 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலை இயக்கி வந்த கருப்பசாமி என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சஞ்சய் குமார் சடலமாக இருந்ததாகவும், ரயிலை அவர் கடக்க முயற்சித்த போது ரயில் மோதி உயிரிழந்ததாகவும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

இருப்பினும் கடந்த சில நாட்களாகப் பல பகுதிகளில் வடமாநிலத்தவர்களைத் தாக்குவதாகப் பரப்பப்படும் வீடியோக்களின் காரணமாக தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களுடைய அச்ச உணர்வு ஏற்பட்டதன் காரணமாகத் திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் ரயில்வே காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விசாரணை மேற்கொண்ட நிலையில் ரயில்வே நிலைய கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் குமார் வந்து சென்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்களை அழைத்து சிசிடிவி காட்சிகளைக் காண்பித்து இது விபத்து தான் என உறுதிப்படுத்தினர்.

மேலும் அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் போயம்பாளையத்தில் அவர் குடியிருக்கும் வீட்டிலிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து சஞ்சய் குமாரின் பிரேதப் பரிசோதனை துவங்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும், காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், சஞ்சய் குமார் மரணம் விபத்து தான் என உறுதி செய்யப்பட்டதை அவர்கள் உறவினர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளோம்.

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது.

வட மாநில தொழிலாளர்கள் ஏதேனும் அச்சம் இருப்பின் மாவட்ட நிர்வாகம் அல்லது காவல்துறையைத் தொடர்பு கொண்ட தங்கள் அச்சத்தைப் போக்கிக் கொள்ளலாம், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...