உடுமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்ககோரி சின்ன வாளவாடியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வாளவாடி - தளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 2000-க்கு அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக, இந்த பகுதி மக்கள் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று வந்தனர்.



இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பூலாங்கிணறு குடிநீர் திட்டம் கைவிடுவதை எதிர்த்தும், நான்கு நாட்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், சின்னவாளவாடி கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் வாளவாடி-தளி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...