கோவையில் 11 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் - போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு

கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 11 உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 11 உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் 11 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரத்தினபுரி சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-ஆய்வாளர் கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பீளமேட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் பெரியகடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும, சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகு செல்வி, கிழக்குப் பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சரவணம் பட்டிக்கும், காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ், சாய்பாபா காலனிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வெரைட்டி ஹால் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...