கோவையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது!

கோவை கணபதி பகுதியில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்த ஓட்டுநர் நடராஜ்(47) என்பவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தைப் பறித்துச் சென்ற இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கணபதி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அண்ணாநகர் குட்டை கணபதி பகுதியில் வசிப்பவர் நடராஜ் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது ஆட்டோவை கணபதி அருகே உள்ள சிக்கன் கடை முன்பு ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த குணசேகரன்(30) மற்றும் நடராஜ் (37) ஆகிய இருவரும் நடராஜன் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். நடராஜ் பணம் தர மறுத்ததால், இருவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர் நடராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.800யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து நடராஜ் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...