கோவை டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் - தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை!

கோவையில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கோவில்பாளையம் டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீச உள்ளதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை காவல்துறை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீச உள்ளதாகத் தெரிவித்து விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த எண்ணை ட்ராக் செய்து விசாரித்த போது தொலைப்பேசியில் அழைத்தவர் விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர்(51) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வெளியே வந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு வீசப் போவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...