கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பேரூர் ஏரியினை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்

கோவை மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்படாமல் முற்றிலும் சிதலமடைந்து காணப்படுகிறது. சரியான பராமரிப்பு இன்மை, சீமைக் கருவேளமங்கள் அதிகரிப்பு, ஆகாயத் தாமரை, பொதுமக்களால் சேகரமாகும் கழிவுகள் உள்ளிட்டவையால் கோவை மாவட்டத்தில் பல குளங்கள் இருந்ததற்கான சாட்சியங்களே இல்லாத அளவுக்கு அழிந்துபோய்விட்டன.



அவ்வாறாக தற்போது அழிந்துவரும் குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவையில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் சமூக வளைதலங்கள் மூலம் ஒன்றிணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.



இவ்வமைப்பின் சார்பில் இன்று 7-வது நாளாக கோவை பேரூர் ஏரியினை சீரமைத்து தூர்வாரும் பணி நடைபெற்றது.

இப்பணியில் 8 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஏரியின் நீர்வழிப்பாதைகள் தூய்மைப்படுத்தப்பட்டன.



இதில் அளவிற்கு அதிகமான அளவில் சுமார் இரண்டு அடி ஆழம்வரை புதைந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

மேலும் மதுபான பாட்டில்கள், மருத்துவ கழிவுகள் அதிகளவு அந்த ஏரியில் உள்ளதாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...