தாராபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - கோவில் பூசாரி பலி!

தாராபுரம் அருகே தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த கோவில் பூசாரியான சோமசுந்தரம் (57), தனது மனைவியுடன் உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் சோமசுந்தரம் உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கல் மோதிக் கொண்ட விபத்தில் கோவில் பூசாரி பலியானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (57). கோவில் பூசாரி. இவருடைய மனைவி தனலட்சுமி (55). இவர்கள் இருவரும் இரவு இருசக்கர வாகனத்தில், உடுமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செலாம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (18) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சோமசுந்தரம் வாகனம் மீது மோதியது.

இதில் பூசாரி சோமசுந்தரம் அவரது மனைவி தனலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த கோகுலும் கீழே விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூசாரி சோமசுந்தரம் உயிரிழந்தார். அவர் மனைவி தனலெட்சுமி மற்றும் கோகுல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...