பரவும் வதந்தியால் வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்..! - கோவை ஜவுளித்துறையினர் கவலை

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும், சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்ல தமிழ்நாடு அரசு அறிவுறுத்துவதாகவும் சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்தியால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளதாக, கோவை மாவட்ட ஜவுளித் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: வடமாநில தொழிலாளர்களைத் தாக்குவதாகப் பரவும் வதந்தியால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கோவை ஜவுளித்தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்ல தமிழ்நாடு அரசு அறிவுறுத்துவதாகவும் சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம்(சைமா) தலைவர் ரவிஷாம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:



தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் மட்டுமின்றி, கட்டுமானத்துறை, மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடமாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் மார்ச் 20-ம் தேதிக்குள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகின்றன.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் தங்கி பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். நூற்பாலைகள், வார்படம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றத் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் வடமாநில தொழிலாளர்களைத் தான் தொழில் முனைவோர் நம்பியுள்ளனர்.

பல மாதங்களுக்குப் பின் ஜவுளித்தொழில் தற்போது தான் நெருக்கடியிலிருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற வதந்திகள் தொழில் நிறுவனங்களில் உற்பத்தியைப் பாதிப்படையச் செய்துள்ளன. தமிழ்நாடு டிஜிபி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று தமிழக முதலமைச்சரின் செயலர் மற்றும் தொழில்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்சினை குறித்துப் பேச உள்ளோம், என்றனர்.

மேலும், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறுகையில், கழிவு பஞ்சு நூற்பாலை தொழிலில் பணியாற்றத் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாகவே தொழில்துறையினர் செலவு செய்து வடமாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து தொழில் செய்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இதுபோன்ற வதந்திகள் தொழிலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...