திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல் ஆணையர் நேரில் விழிப்புணர்வு

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வீடியோக்களைக் கொண்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடந்ததாகப் பீகாரைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் அச்சமடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதனிடைய திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்பதை தொழிலாளர்களுக்கு விளக்கும் வகையில், திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தலைமையில் காவல்துறையினர் நேரில் சென்று வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் திருப்பூரில் நடைபெற்றது இல்லை எனவும், இருப்பினும் திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு மொழிகளில் பேசக்கூடிய தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஏதேனும் அச்சம் இருப்பின் காவல்துறையின் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு தங்கள் அச்சத்தைப் போக்கிக் கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்கள் எதுவும் திருப்பூரில் நடைபெற்றது அல்ல, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் போல உண்மையான கள நிலவரம் இல்லை, இங்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் அமைதியாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறை சார்பில் வதந்தி பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...